மூலிகைகள்
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும், உடலுக்கு வலிமையை தரும் முருங்கை விதை
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்பதுண்டு.
நீரான விந்துவுமே நிச்சயமாய்க் கட்டிவிடும்
சீரான மேனி செழிப்பாகும் – நேராய்
நெருங்க மலர்சூடும் நீண்ட குழல் மாதே!
முருங்கை விதையை மொழி
குணம்
முருங்கை வித்தினால் சலரூபமான இந்திரியம் தடிப்பாகும், உடலுக்கு சரீரம் பலக்கும் என்க .
பயன்கள்
- பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும், விந்தணுக்கள் அதிகரிக்கும்.
- உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
- இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.
- இதயத்தைப் பலப்படுத்தும்.
- நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலப்படும்.
மிக பிரயோசனமான விடயங்கள். நன்றி.