மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு
மூட்டு இணைப்புகளில் உள்ள தசைப் பகுதி சேதமடைவதால் மூட்டு வலி ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘ஆர்த்தரைட்டிஸ்’ என்று அழைக்கின்றனர். அதிகமான உடல் எடை பரபரப்பான வாழ்க்கை முறை முறையற்ற உணவு பழக்கம் ஆகியவற்றால் மூட்டுவலி ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களும் – வயிற்றுப் புண் – காசநோய் – டான்சில்- தைராய்டு சுரப்பிகள் குறைவாக வேலை செய்தல் – நரம்புக் தளர்ச்சி – ரத்தசோகை ஆகியவற்றாலும் இந்நோய் ஏற்படவாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதுமையில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. மூட்டு தேய்வு காரணமாக வலி ஏற்படும். இவ்வாறு இதற்க்கு ‘ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் ‘ என்று பெயர். 20 வயது முதல் 50 வயதுக்குள் மூட்டு இணைப்புகளில் வலிஏற்பட்டால் அதற்கு ரூமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்று பெயர்.
இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு இரவில் அதிகமான வலி உண்டாகும். அசைவின்மை ஏற்படும் நடக்க முடியாமல் அதிக அவதிப்படுவார்கள் முதுகுப் பகுதியிலும் அடிக்கடி பிடிப்பும் வாலியும் ஏற்படும். விறல் நுனிகளில் மரமரப்புத் தன்மை உண்டாகும். காய்ச்சல் வரலாம். உடல் சோர்வு – உடல் தளர்ச்சி உண்டாகும்.
மூட்டு நோய் உள்ளவர்கள் பருப்பு வகைகள் மீன் – இறைச்சி – பசலைக்கீரைகள் – முட்டை (மஞ்சள் கரு சேர்க்காமல் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்) டால்டா – நெய் – இனிப்பு வகைகள் முதலியவற்றை தவிர்ப்பது நல்லது கால்சியம் – இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். கிழங்கு வகைகளை தவிர்ப்பதும் நல்லது. கோதுமை – ராகி – முடக்கற்றான் வாத நாராயணன் இலை (இது மலத்தை இலகுவாக போகச்செய்யும்) சுக்கு – பூண்டு ஆகிய வற்றையும் உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது.
இதற்கு சித்தமருந்துகள் :
சீந்தில் தண்டுடன் சிறிதளவு இஞ்சியை தட்டிப் போட்டுக் கசாயமாக்கிக் குடிக்க மூட்டுவலி குணமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் கால் வீக்கமும் குறையும்.
மூட்டு வீக்கம்- வலி இருந்தால் சதக்குப்பையை பொடி செய்து வடித்த கஞ்சியில் குழைத்து மேலே தடவலாம்.
தினசரி காலை வெறும் வயிற்றில் வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வெந்நீர் சாப்பிடலாம்.
பிரண்டையை ரசமாக வைத்து சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும் வாரம் இருமுறை சாப்பிடலாம்.
சுக்கு, மிளகு, அரிசிதிப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.