மூலிகைகள்

பற்களை உறுதிப்படுத்தும்…குடல் கிருமிகளை நீக்கும்…கொட்டைப்பாக்கு

தமிழர்களின் சுபகாரியங்கள் அனைத்திலும் இடம் பெறும் கொட்டைப்பாக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதை வெற்றிலை, சுண்ணாம்புடன் சேர்த்து உண்பதுண்டு.

கொட்டைப்பாக்கென்று றுரைக்கிற் கோழை மலம் போமூல
தட்டைப்பார்க் குங்கிருமி சாமந்தக் – கொட்டைப்பாக் த்
கொத்தசுரத் தோர்க்குமருந் துண்டவாய்க்கும் பொருந்து
மெத்தவுண்ணிற் சோபைவரும் விள்

குணம்

கொட்டைப்பாக்கினால் கோழைமலம், மலப்பையினது அடிதட்டிலிருக்கும் கிருமி இவைகள் நீங்கும். அதிகமாக உண்ண சோகை உண்டாகும்.

பயன்கள்

  • கொட்டைப்பாக்குடன் வால் மிளகையும் வெற்றிலை சுண்ணாம்பையும் சேர்த்து வாயிலிட்டு மென்று சாப்பிட பற்கள் கரையாமல் அசைவு நீங்கி உறுதிப்படும்.
  • கொட்டைபாக்குத்தூளில் ஒரு கிராம் அளவு கோதுமை மாவுடன் கலந்து 4 மணிநேரத்திற்கு ஒரு முறை கொடுத்துவர பேதி நிற்கும்.
  • கொட்டைப்பாக்கினால் கோழை, மலக்கிருமி இவைகள் நீங்கும்.
  • கொட்டைப்பாக்கை சுட்டு கரியாக்கி பல் துலக்க உபயோகப்படுத்த பற்கள் உறுதிப்படும்.
    குடலில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
  • கொட்டைப்பாக்கை அதிகமாக உபயோகிக்க இரத்த சோகை உண்டாக்கும்.
  • பாக்கின் மேல்தோலை நீக்கி உலர வைத்து சிறுதுண்டுகளாக நறுக்கியும் மெல்லிய சீவல் பொடிகளாகவும் செய்து வைத்துக்கொண்டு உபயோகிப்பது உண்டு.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 8 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!