மூலிகைகள்
நுரையீரல், இருதயத்திற்கு பலத்தை கொடுக்கும் பட்டாணி
புரதசத்து அதிகமுள்ள பட்டாணி ஆரோக்கிய வாழ்விற்கு பெரிதும் உதவுகிறது. நல்ல சுவையுள்ள பட்டாணியை சுண்டலாகவும், காய்கறி கூட்டுகளிலும் சேர்த்து உண்பதுண்டு. இது இருதயத்தை பலப்படுத்தும். நுரையீரலை வலிமையாக்கும்.
துய்ய நுரை யீரலுக்கும் தோன்றுநடு மார்புக்கும்
உய்யபலந் தந்திடினு மொன்றுகேள் – தையலே
சாற்றுங் குடலதனிற் சாரும் வலிமந்தம்
ஏற்றத்திரள் பட்டாணிக்கே
குணம்
பட்டாணி நுரையீரலுக்கும் இருதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கும். ஆனால் சிறிது வாயுவையும் மந்தத்தையும் கொடுக்கும்.
உபயோகிக்கும் முறை
உலர்ந்த பட்டாணியை வறுத்து உண்பதுண்டு. அல்லது இதனை ஊறவைத்து காய்களிகளில் கூட்டி பொரியலாக செய்து உண்பதுண்டு. பச்சை பட்டாணியை ஊறவைத்து, உலர்ந்த பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து சுண்டலாக உண்பதுண்டு.
பயன்கள்
- பட்டாணி நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு பலத்தை உண்டாக்கும்.
- நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கெட்ட கொழுப்பை குறைத்து மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
- சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவில் பச்சை பட்டாணி புற்று நோய் பதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.