மூலிகைகள்
வெண்டைக்காயின் மருத்துவ நன்மைகள்
வெண்டைக்காய் சத்துக்கள் நிறைத்த காய்கறியாகும். இதை பச்சையாகவும் சமைத்தும் உண்பதுண்டு. வெண்டைக்காய் குளிர்ச்சி நிறைந்ததாகும். இதனால் உடல் உட்சூடு குறைந்து குளிர்ச்சியுண்டாக்கும். இதில் நோய் எதிர்ப்பு அதிகம் உள்ளதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
கண்ட கிராணி கடிய வதிசாரம்
விண்டவெண் சீதரத்த மேவுங்கா – னொண்டொடியே
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க்குணவாம்
வெண்டுக்கா யுண்பார்க்கு விள்
குணம்
வெண்டைக்காயினால் கிரகணி பேதி, விந்தணு உற்பத்தி, வாதம், நாவுக்கு ருசி, உடல் குளிர்ச்சி இவைகள் உண்டாகும்.
பயன்கள்
- வெண்டைக்காயின் வேரை நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட விந்தணு நுங்கு போல் இறுகும்.
- வெண்டைக்காய் உடல் சூடு, உஷ்ண இருமலை குணமாக்கும்.
- வெண்டைக்காய் புத்திக்கூர்மை, பார்வை திறனை அதிகரிக்கும்.
- வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் குடலை சுத்தப்படுத்துகிறது.
- வெண்டைக்காய் விந்துவை கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.