மூலிகைகள்
மூலம், பவுத்திரம், கல் அடைப்பு நீக்கும் தொட்டாற்சுருங்கி
தொட்டாற்சுருங்கி மூலிகையை காந்தசக்தி மூலிகை என்றும் கூறுவர். இதனை தினமும் கைகளில் தொட்டு வர மனோசக்தி அதிகரிக்கும். இதனை தொடும்போது சுருங்கி விடுவதால் இதற்கு தொட்டாற் சுருங்கி என்று பெயர்.
மேகநீ ரைத்தடுக்கு மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னல்கு மதுவுமன்றித் – தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற காலைத் துரத்திவிடுந்
தொட்டாற் சுருங்கியது சொல்
குணம்
தொட்டாற்சுருங்கி மேக மூத்திரத்தை நீக்கும், உடலில் ஓடிக் கட்டுகின்ற வாதத் தடிப்பை கரைக்கும் என்க.
பயன்கள்
- 35 கிராம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி 250 மிலி தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு வேலைக்கு 1/2 அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்க நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.
- தொட்டாற்சுருங்கி இலையையும் வேரையும் இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு வேலைக்கு 5 கிராம் அளவு பசும்பாலில் போட்டு கொடுத்து வர மூலம், பவுத்திரம் போம்.
- இதன் இலைச்சாற்றை பவுத்திர மூலரணங்களுக்கு ஆசனத்தில் தடவிவர ஆறும்.
- தொட்டாற்சுருங்கி இலையை மெழுகுபோல் அரைத்து விரைவாதம், கை கால் மூட்டுகளில் வீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட குணமாகும்.
- இதன் இலைச்சாற்றை பஞ்சில் நனைத்து ஆராதபுண்களுக்கு உட்செலுத்தி வைக்க விரைவில் குணமடையும்.
- தொட்டாற்சுருங்கி இலையை தண்ணீர் விட்டு வேகவைத்து இடுப்பிற்கு தாளும்படியான சூட்டில் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி நீங்கும்.