உணவே மருந்து
கருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை
வாழைப்பூ பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. குறிப்பாக கருப்பை கோளாறுகளை குணமாக்குகிறது. வாழைப்பூவை வடையாக செய்து சாப்பிட கருப்பை சம்பந்தமான கோளாறுகளை குணமாக்குகிறது.
தேவையானவை
- வாழைப்பூ – 1 சிறியது
- கடலைப்பருப்பு – 100 கிராம்
- வெங்காயம் – 1 பெரியது
- பச்சை மிளகாய் – 3
- சீரகம்
- கொத்தமல்லி
- கருவேப்பிலை
- உப்பு
செய்முறை
கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவேண்டும். வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஊறவைத்த பருப்பை அரைத்து அதனுடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை , உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
பயன்கள்
- பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
- ஆண்மை குறைவு நீங்கி விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
- உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும்.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, அசதி ஆகியவை நீங்கும்.