வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் பஞ்ச தீபாக்னி சூரணம்
இள அசீரணம், உணவு செரியாமை, அக்கினி மந்தம், வயிற்றுப் பொறுமல் போன்ற நோய் உள்ளவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமானது. ஏனென்றால் பசிக்கும் ஆனால் சாப்பிடமுடியாது. சிலருக்கு வயிற்றில் மணலை நிரப்பியது போல் கனமாக தொடரும். உணவு சீரணிக்க முடியாமல் திணறல், புளித்த ஏப்பமாக வருதல், சிலருக்கு படுக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவிக்கும் நிலையும் இருக்கும். அதற்கு இயற்கை மூலிகையைக் கொண்டு விரைவில் குணமடைய செய்யலாம்.
தேவையான மூலிகைகள்
- ஏலக்காய் – 50 கிராம்
- சுக்கு – 50 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- திப்பிலி – 50 கிராம்
- மிளகு – 50 கிராம்
இவை அனைத்தையும் நன்றாக பொடி செய்து கொள்ளவும் 300 கிராம் பனை வெல்லத்தை தண்ணீரில் போட்டு கிளறி பாகு பதத்தில் தூளை போட்டு கிளறி இறங்கியவுடன் சிறிது நெய், தேன் கலந்து கிளறி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு இருவேளை சாப்பிட இள அசீரணம், உணவு செரியாமை, அக்கினி மந்தம், வயிற்றுப் பொறுமல், மந்தம் மறைந்து போகும்.
இந்த 5 வகை சூரணத்தை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம் எந்தவிதமான அசீரணகோளாரும் நீங்கும்.