மங்குஸ்தான் மருத்துவ நன்மைகள்
மங்குஸ்தான் பழம் பல மருத்துவ நன்மைகள் கொண்டதாக இருந்தாலும் இதன் ஓடு அதிக மருத்துவ குணங்களை கொண்டது.
இரணமுடன் சீத மிரத்தமிக்கும் பேதி
சரணமென வாடுமதி சாரம் – திரணமெனப்
பொங்குகர்ப்ப மேகமெலாம் போமே புரையில்லா
மங்குஸ்தான் ஓடால் மதி
குணம்
மங்குஸ்தான் பழத்தின் மேல் ஓட்டால் வயிற்று வலி, சீத பேதி, இரத்தபேதி, அதிசாரம், கர்ப்ப மேகம் முதலியவை நீங்கும்.
சீத பேதி, இரத்த பேதி குணமாக
மங்குஸ்தான் மேல் 15 கிராம், கொத்தமல்லி விதை, சீரகம் இரண்டும் 10 கிராம் அளவு அனைத்தையும் இடித்து ஒரு 200மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100மிலியாக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு 2-3 அவுன்ஸ் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட சீதபேதி, இரத்த பேதி முதலியவை குணமாகும்.
மங்குஸ்தான் பழ ஓடு 50 கிராம், மாதுளை பழ ஓடு 50 கிராம் , கச கசா 30 கிராம், சர்க்கரை 30 கிராம், உலர்ந்த ரோஜா 25 கிராம் இவைகள் அனைத்தையும் இடித்து சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1/2 – 2 கிராம் அளவு சாப்பிட்டு வர சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.
நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் குணமாக
உலர்ந்த மங்குஸ்தான், வால் மிளகு, படிகாரம், வேலம் பிசின் ஆகியவை ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து வைத்துகொன்டு மோரில் சிறுதளவு கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் முதலியவை குணமாகும்.
கண் எரிச்சல் நீங்க
மங்குஸ்தான் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குணமாகும். மேலும் கண் சம்பந்தமான நோய்களை நீக்கும்.
இதய நோய்
இரத்த அழுத்தம் இல்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதால் இதய நோய்கள், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.