உடல் நலம்
புற்றுநோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்
புற்று நோய் மிகவும் பயங்கரமானது. தாங்க முடியாத வேதனையை தருவது. நோய்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமானது. மிக விரைவில் உயிரை மாய்த்து விடக்கூடிய பயங்கர கொடிய நோய் ஆகும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக தோன்றக்கூடிய நோய் ஆகும்.
நோயின் தன்மை
புற்றுநோயின் தன்மையே விசித்திரமானது. நோய் ஆரம்பமாகி அது முழுவளர்ச்சி பெற்ற பின்புதான் உடலில் மேற்புறத்தில் கட்டி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பிறகு படிப்படியாக இது வளர்ந்து சிறுகச்சிறுக வலியுண்டாக்கி இறுதியில் மிகத்தீவிரமடைகிறது.
புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்
- புற்றுநோய்க்கு அஸ்திவாரமிடும் மலக்குடல் கட்டிகளை தடுக்க சில வழிமுறைகளை காணலாம்.
- பற்களில் அழுக்கு சேராதபடி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.
- எதையும் மிகவும் சூடாக உட்கொள்ளலும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
- மூக்கு (கற்று பாதை) எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
- தொண்டை சம்பந்தமான நோய்கள் வராதபடி பாதுகாத்து கொள்ளவேண்டும்.
- காரசாரமான மசாலா உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும்.
- வருடத்திற்கு ஒருமுறையாவது குடலை சுத்தம் செய்ய வேண்டும். (சித்த மருத்துவத்தில் பேதி மருந்து சாப்பிடுவது சிறந்தது.)