பாதங்கள் பற்றி அறிந்துகொள்வோம்
பாதங்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் சங்கமம் ஆகும். நம் முன்னோர்கள் மனிதனின் கால் வைத்த இடத்தில் புல், பூண்டு கூட முளைக்காது என்பார்கள். நரம்பு நண்டலங்களின் இரத்த ஓட்ட பாதையில் பாதங்களின் வழியாக உடலில் உள்ள சில கழிவுகள் வெளியாகின்றன.
7000 நரம்பு மண்டலங்களின் முடிச்சுகள் நமது பாதத்தில் உள்ளன. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சொல்வது கூட நாம் காலணிகள் அணிந்து நடப்பதால் நரம்பு மண்டலங்களுக்கு சரியான அழுத்தம் கிடைப்பதில்லை என்பதால் தான்.
உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாக
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் இந்த மூன்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
இஞ்சியும் , பூண்டும் , சின்ன வெங்காயமும் நன்மை தரும் பாக்டீரியாக்களை ஈர்த்து வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்ந்த இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை உபயோகிப்பது நல்லது.
நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் வெளியில் வைத்து அல்லது பிரிட்ஜில் வைத்து உபயோகிக்க கூடாது. சின்ன வெங்காயத்தை சாப்பிடும்பொழுது உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.