உடல் நலம்
நோயின்றி வாழ சில வழிமுறைகள்
உணவே அனைத்து உயிரினங்களுக்கும் பிரதானமானது. நாம் எந்த மாதிரியான உணவை சாப்பிடுகிறோம் அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நம் உடலுக்கு வலிமையையும் நோயும் வருகிறது.
அளவோடு உண்பவர் நல்ல ஆரோக்கியத்துடனும், அதிகளவு உண்பவர் நோய்களுக்கு ஆளாவதும் இயற்கை.
நம் உடலுக்கு ஒத்துவராத உணவுவகைகளை நாம் தவிர்ப்பது நல்லது. ருசியின் காரணமாய் நாம் உணவை அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது நம் உடல் நோய்களுக்கு ஆளாகிறது.
நம் முன்னோர்கள் இதற்கான வரையறையை தெளிவாக கொடுத்துள்ளார்கள். வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றில் ஒன்று குறைந்தாலும் அதிகமானாலும் நோய்கள் உண்டாகும்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
நோயின்றி வாழ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
- பகலில் உறங்குவதும், மலசலங்களை அடக்குவதும், சுக்கிலத்தை அடுத்தடுத்து விடுவதும் உடலுக்கு தீமையை கொடுக்கும்.
- பசுவின் பாலையே அருந்தவேண்டும்.
- எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பது நன்மையை கொடுக்கும்.
- பசிக்காமல் உணவு உண்பதும், பகலில் சாப்பிட்டவுடன் உறங்குவதும் உடலுக்கு தீமையை கொடுக்கும்.
- மிகுந்த தாகம் உண்டானாலும் சாப்பிட்ட பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். கருணைக்கிழங்கை தவிர மற்ற கிழங்கை தவிர்ப்பது நல்லது.
- இது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். நவீன மருத்துவமும் இதையே மும்மொழிகிறது.