நீளமான முடி வளர உதவும் பால்
தலைமுடி நன்றாக இருக்கும் போது அதை நாம் சரியாக கவனிப்பதில்லை அதை முறையாக பராமரிப்பதும் இல்லை ஆனால் அதில் பிரச்சினை ஏற்படும் போது தான் தலைமுடியை கவனிக்கின்றோம்.
தலைமுடி பராமரிப்பது என்பது மிக மிக சுலபமே நாம் வீட்டில் இருக்கும் பொருளை கொண்டு மிக எளிதாக பராமரிக்கலாம். பால் அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடியது. இதை கொண்டு தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
புரோட்டீன்
பாலில் கேசின் மற்றும் வே என இரண்டு விதமான புரோட்டீன் இருக்கிறது. புரோட்டீன் குறைபாட்டால் தலைமுடி வலுவிலக்கும் எனவே புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துகொள்ளவது சிறந்தது.
தலைமுடி வலுப்பெற
தலை முடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது போதிய ஊட்டச்சத்து இல்லாதது தான். இதற்கு பாலுடன் சிறிதளவு தேன், முட்டை சேர்த்து நன்றாக தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளித்து வர தலைமுடி நன்றாக வலுப்பெறும்.
முடி வளர்ச்சி
பாலில் க்ளுடைமன் என்ற அமினோ அமிலம் இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. புதிய முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.