மூலிகைகள்
இரத்தத்தை சுத்தமாக்கும் நாரத்தங்காய்
நாரத்தங்காய் கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்கிறது. இதை எலுமிச்சை போல் சாறுபிழிந்து பானமாக அருந்தலாம், ஊறுகாய் செய்து சாப்பிட இதன் பலனை முழுவதுமாக பெறலாம்.
நன்றி யுறவுலகி நாரத்தங் காயருந்த
வென்றி தரும்புளிப்பான் மெய்ச்சுத்த – மன்றியுமோ
வாதமொடு குன்மமறும் வாற்கிருமி யும்போகுங்
காதலுறு தீபன மாங் காண்
குணம்
நாரத்தங்காயால் வாதநோயும், குன்மமும், வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும். பசியுண்டாம், இதன் புளிப்பினால் தேகஞ் சுத்தியாம்.
உபயோகிக்கும் முறை
இதைத் துண்டுபடாமல் நான்கு பிளவாக அரிந்து நிறைய உப்பிட்டு அழுத்தி, ஜாடியில் போட்டு தினந்தோறும் வெயிலில் வைத்து நீர்சுண்ட பதப்படுத்தி நாட்சென்று உபயோகிக்கப்படுத்தலாம்.
பயன்கள்
- நார்த்தங்காய் இரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
- மலத்திலுள்ள கிருமிகளை அளிக்கிறது.
- அரோசகத்தை (ஊணில் வெறுப்பு ) போக்கி பசியை அதிகப்படுத்தும்.
- மருந்துண்ணும் காலங்களில் பத்தியத்திற்கு உதவும்.
- கோடைகாலங்களில் ஏற்படும் சோர்வை போக்கி புத்துணர்வு அளிக்கும்.