தோல் நோய்களை நீக்கும் சிவனார் வேம்பு
மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிறத் தண்டினையும் உடைய மிகச்சிறு செடி. தமிழகமுழுமையும் செம்மண் நிலத்தில் வளரக்கூடியது. செடி பிடுங்கிய உடனே உலர்ந்தது போல எரியும் தன்மையுடையதாகையால் அன்றெரித்தான் பூண்டு என நாட்டுப் புறத்தில் கூறுவதுண்டு. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது.
சய்க்குமிடிப் புண்பழம்புண் சர்மகுட் டம்பிளவை
தீக்கடுகால் வன்பெருநோய் சிந்துமா-நோய்க்கு
விதையாதி வேம்பினை நெய்க்கழகு காலை
புதையாதி வேம்பினை லுன்.
மருத்துவ பயன்கள்
தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தால், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.
செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர ஆயுளை நீட்டிப்பதோடு தொழு நோய் போன்ற கடும்நோய்களையும் குணப்படுத்தும்.
செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணையில் குழைத்துத் தடவி வரச் சொறி, சிரங்கு, கபாலக் கரப்பான் ஆகியவை தீரும்.
இலையை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைத்துக் கொள்ளும் அல்லது அமுங்கி விடும்.
வேரால் பல் துளக்கவோ மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல் வலி ஆகியவை குணமாகும்