மூலிகைகள்
கடுகு மருத்துவ பயன்கள்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி, கடுகை பொதுவாக நாம் தாளிப்பதற்கு பயன்டுத்துகிறோம். இதனால் ஒருவித மணமும் ஜீரணசக்தியும் உண்டாகும்.
மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு
முந்து சுகப்பிரச வங்களுண்டா – மிந்து நுதன்
மானே கிராணிகுன்ம மாறுமுத்தோ சங்களருந்
தானே கடுகிற்குத் தான்
மருத்துவ பயன்கள்
- 50 கிராம் கடுகை சுத்த நீர் விட்டு அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து, பிறகு இறக்கி ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சூடு பொறுக்கும் சூடு வந்ததுடன் இருகால் பாதங்களும் படும்படி 10-15 வைத்திருக்கவும். இது தூக்கமின்மை, மனக்குழப்பம், படபடப்பு, சோர்வு ஆகியவை நீங்கும்.
- கடுகை அரைத்து பற்று போட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும். இது போல் செய்யும் போது தோல் தடித்து காணப்பட்டால் உடனே எடுத்துவிட்டு தண்ணீரில் கழுவி விடவேண்டும்.
- கடுகு, ஆவாரை விதை, கருவேலம் பிசின், மர மஞ்சள் ஆகியவற்றை சூரணமாக்கி 1-2 கிராம் சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும்.
- கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி காதில் விட தலைவலி தீரும்.
- கடுகை தேனில் அரைத்து உட்கொள்ள கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
- கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கல் தீரும்.
இங்கு கூறப்பட்டுள்ள உபயோகமெல்லாம் சிறுகடுகு, செங்கடுகு இவற்றிற்கேயாகும். கடுகில் வெண்கடுகு மிகுந்த கரமுடையது இதை கவனமுடன் கையாளவேண்டும்.