மூலிகைகள்
உருளைக்கிழங்கு மருத்துவ பயன்கள்
உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிழங்கு ஆகும். இதன் தாவரவியல் பெயர் Solanum tuberosum ஆகும். இதன் அடித்தண்டு மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருளாக இருந்து வருகிறது உருளைக்கிழங்கு.
போக பலமுண்டாம் பொற்கொடியே வாதமறும்
வேகமுறுந் தும்மலின் வேரறுக்கும் – தேகமதில்
வெந்தவழ லாற்றும் மிகுமந்தம் உண்டாக்கும்
அந்தவுரு ளைக்கிழங்கி னால்
குணம்
உருளைக்கிழங்கினால் தேகபுஷ்டி உண்டாகும். வெந்நீரால் உண்டான கொப்பளங்களை ஆற்றும். வாயுவை கண்டிக்கும்.உருளைக்கிழங்கினால் ஜீரணம் மந்தப்படும்.
பயன்கள்
- உருளைக்கிழங்கை சமைத்துண்ண உடல் புஷ்டி உண்டாகும். அடிக்கடி வருகின்ற தும்மலை நீக்கும். தேகத்திலுள்ள மேகவாயுவை கண்டிக்கும்.
- உடலில் வெந்நீர் பட்டுவிட்டால் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளிக்காமல் அடங்கும்.
- திடீரென அடிபட்ட இடங்களில் உருளைக்கிழங்கை அரைத்து பூசிக்கொண்டு அதன்மேல் துணி வைத்து கட்டிக்கொள்ள விரைவில் குணமடையும்.
- வீக்கம், எரிச்சல் போன்றவைகளுக்கு உருளைக்கிழங்கை அரைத்து தடவ சாந்தப்படும்.
- உருளைக்கிழங்கினால் எளிதில் ஜீரண சக்தி அடையாது.
நல்ல குறிப்புகள்