உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்
கொழுந்து வேப்பிலைத்துளிர் 4 ஐ எடுத்து அத்துடன் 1 மிளகு, 1 கல்லுப்பு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டையை தினமும் காலை வெறும் வயிற்றில் வென்னீருடன் விழுங்கி வந்தால் எடை குறையும்.
பப்பளிக்காயைச் சமைத்து உண்டு வர தடித்த உடம்பு குறையும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் சுத்தமான சமையல் ஆலிவ் எண்ணையை சாப்பிட்டு வந்தால் 1 மாதத்திற்குள் 2 கிலோ எடை குறையும்.
அஸ்வகந்தி இலையில் 1 இலையை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி உருட்டி ( காலை வெறும் வயிற்றில், பகல் உணவுக்கு முன் இரவு உணவுக்கு முன் ) ஆக 3 வேளை அதை வென்னீருடன் விழுங்கி வந்தால் உடல் எடை வெகுவாகக் குறையும்.
மந்தாரை வேர் 50 கிராம் 300 மிலி நீரிலிட்டு பதியாகக் காய்ச்சி நாள்தோறும் அருந்த பருத்த உடல் குறைந்து மெலியும்.
அதிக எடையுள்ளவர்கள் அருகம் புல் சாறுடன் கேரட் சாற்றையும் கலந்து ( சம அளவு ) காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் ஒரு கிலோ எடை குறையும்.
முள்ளங்கியைச் சமைத்து உண்டு வர உடல் குறையும்.