இயற்கை முறையில் கண் மை தயாரிக்கும் முறை
கண்களுக்கு ஒப்பனை செய்வது முகத்தின் அழகை மேம்படுத்திக்காட்டும். தற்போது கண்களுக்கு ஒப்பனை செய்ய அனைவரும் விரும்புகின்றனர். தற்போது அதிகமாக வேதிப்பொருட்கள் நிறைந்த கண் மைகளே அதிகமாக தயாரிக்கப்படுகிறது.இதை நாம் பயன்படுத்தும் போது நன்மைகளை விட தீமைகளை அதிகமாக உண்டாக்குகிறது.
எனவே நாம் இயற்கையாக கண்மை தயாரித்து பயன்படுத்தினால் இயற்கை அழகோடு கண்களுக்கும் பாதுகாப்பையும் அழகையும் தருகிறது. இதை தயாரிப்பது மிக சுலபமே, கண்மை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான மூலிகைகள்
- கரிசலாங்கண்ணி இலைச்சாறு
- சோற்றுக்கற்றாழை
- விளக்கெண்ணெய்
- நெய்
செய்முறை
கரிசலாங்கண்ணி இலை சாறு எடுத்து அதை ஒரு வெள்ளை துணியில் நனைத்து திரியாக செய்து கொள்ளவும். திரியை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கேற்றி பிறகு சோற்றுக்கற்றாழை ஒன்றை எடுத்து தோலை நீக்கிவிட்டு எடுத்து அந்த விளக்கின் நுனியில் பிடித்தால் கரிப்படியும் அதை வழித்து எடுக்கவும் இப்படியே தேவையான அளவு எடுத்து நெய் சிறிதளவு கலந்து வெயிலில் வைத்து நீர் வற்றியதும் பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம். இந்த மை கண்களுக்கு அழகான தோற்றத்தையும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.