ஆஸ்துமா எனும் காச நோய் குணமாக
இது இலுப்புடன் கூடிய வியாதி ஒவ்வொரு முறை இழுப்பு ஏற்படும் போது சுவாத்தைக் கடுமையாக தடை செய்து மார்பில் தாங்க முடியாத அமுக்குவது போன்ற உணர்ச்சியுடனும் கர் புர் என்ற சப்தத்துடன் கூடிய சுவாசத்தை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிக்க காற்றை உள் இழுக்கும் போதும் வெளியே விடும் போதும் நுரையீரலின் சிறிய குழாய்கள் அடைபட்டு இருக்கும். அதில் சளி சேர்ந்து மேலும் வழி அடைபடும் இது ஒரு நாளில் மறைந்துவிடும். சிலருக்கு திடீரென ஆஸ்துமா மோசமடையும்.
பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன தூசி பறத்தல், சிகரெட் பிடித்தல், மன அழுத்தம் சுவாசத்தை ஆளும் நரம்புகளின் கோளாறுகளினாலும் ரசாயன புகைகள் அதிகமாக ஆஸ்பிறின் மாத்திரை சாப்பிட்டு வருதல் ஆகியவற்றினாலும் இவ்வியாதி ஏற்படக்கூடும்.
அலர்ஜிதான் இதன் அடிப்படை காரணமாக உள்ளது. அலர்ஜியால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். காரணம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத்தான் அதிக அலர்ஜி எதிர்ப்பு சக்தி இருக்கும்.
மருத்துவம்
ஆடுதீண்டாபாளை இலையை உலர்த்தி பொடியாகச் கத்தரித்துப் புகையிலையில் வைத்து சுருட்டி சுற்றி புகைபிடிப்பது போல் பிடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
ஊமத்தம் இலையை நிழலில் உலர்த்தி சிறிதாக கத்தரித்துப் புகையிலையில் வைத்து புகைப்பிடித்தால் ஆஸ்துமா குணமாகும். (எச்சரிக்கை அதிகமாக பயன் படுத்தக்கூடாது).
கண்டங்கத்திரி இலை, ஆடாதொடை இலைகளை உலர்த்தி பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.