ஆவாரம்பூ மருத்துவ பயன்கள்
ஆவாரையின் ஆங்கிலப் பெயர் ‘ Casssia Auriculata flower’ என்பதாகும்.
குத்துச் செடியாக – மஞ்சள் நிற பூக்களை கொண்டது. தமிழகம் முழுதும் சாலை ஒரங்களில் அதிகமாக காணப்படும். ஆவாரை – ஆலிகு – ஆவிரை – மேகாரி தல போடம் – ஏமபுட்பு ஆகிய பெயர்களில் அழைக்கப் படுகிறது.
ஆவாரை உள்ள இடத்தில் சாவாரை கண்டதுன்டோ ! என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளது. இதன் பட்டை தோல் பதப்படுத்த பயன் படுகின்றது. கோயிலில் காப்பு கட்டவும் இதனை பயன்படுத்துகின்றனர். குங்குமப்பூவிற்கு பதிலாக இதன் பூ பயன்படுகிறது.
இலையை அரைத்து அரப்பு போல் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூளை குளிர்ச்சி அடையும்.
ஆவாரை இலைத்தளிர் கொஞ்சம் – கொன்றை மரவேர் கொஞ்சம் – கல்மதம் கொஞ்சம் (சம அளவு) சேர்த்து அரைத்து புளித்த மோரில் போட்டு கலக்கி தினசரி காலையில் மட்டும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாவதுடன் உடலும் உறுதியாகும்
இதன் பூவை பச்சைப் பயனுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு – இரத்தமாக போகும் சிறுநீர் – பெண்களுக்கு பெரும்பாடு – தாகம் – உட்காங்கை முதலியவை குணமடையும்.
ஆவாரை பூவை உலர்த்தி பொடி செய்து நலங்குமாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்தால் கற்றாழை நாற்றம் – உடம்பு உப்பு பூத்தல் நீங்கும், உடலும் பொலிவு பெரும். ஆவாரை பிசின் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தாலும் அதனை எறும்புகள் தின்று விடும். இப்பிசினை பசும்பாலுடன் கலக்கி சாப்பிட்டால் விந்து நஷ்டம் குணமாகும்.
எள் – ஆவாரம் வேர்ப்பட்டை சூரணம் – கடலை மாவு – ஆகியவை தேவையான அளவு எடுத்து அதனுடன் சர்க்கரை – தேன் கலந்து நன்றாக குழைத்து வைத்து கொண்டு காலை – மாலை நெல்லிக்காய் அளவு தினசரி சாப்பிட்டு வர நீரிழிவு – அழலை – தாகம் ஆகியவை குணமாகும்.
ஆவாரை இலைகளை தலையின் பரப்பிவைத்து தலைப்பாகை போல் துணியால் கட்டிக் கொண்டு – கையிலும் கொஞ்சம் இலைகளை வைத்துக் கொண்டு நீண்ட தூரப் பயன் மேற் கொண்டால் வெய்யிலின் கொடுமையை தவிர்க்கலாம். ஆவாரை செடி இருக்கும் இடங்களில் நின்றாலே வெயிலுக்கு இதமாக இருக்கும்.