மூலிகைகள்
வெந்தயம் மருத்துவ பயன்கள்
வெந்தயம் கீரை இனத்தை சேர்ந்தது. கீரையும், விதைகளும் மருத்துவ பலன்கள் உடையது. வெந்தயம் குளிர்ச்சியை உண்டாகும். காய்ச்சல், சீதக்கழிச்சல், பேதி, ரத்தபித்தம், காசம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணமாக்கும்.
மேதிகண மத்திசுர மேகங் கயஞ்சீதா
பேதியதி சாரநெய்ப் பித்திரும – லாதியநோய்
நீக்கு மனற்றணிக்கு நித்தமுற விந்துவையுண்
டாக்கு மனமே யறி
பயன்கள்
- சிறிது புளியையும் சீமை அத்திப்பழத்தையும் தண்ணீர் விட்டு கரைத்து பிழிந்தெடுத்த சாற்றில் 5 கிராம் அளவு வெந்தயத்தை வேகவைத்து கடைந்து தேன்விட்டு சாப்பிட மார்பு சளி, மூர்ச்சை தீரும்.
- வெந்தயம் 10 கிராம் அளவு எடுத்து நெய் ஊற்றி வறுத்து சிறிது உப்பும் சோம்பும் சேர்த்து அரைத்து உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுப்போக்கு தீரும்.
- 5 கிராம் வெந்தயத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து வெந்நீரில் போட்டு ஆறியபின் சாப்பிட சீதபேதி குணமாகும்.
- வெந்தயம் 5 கிராம் அளவு வேகவைத்து கடைந்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.
- வெந்தயத்தை சீமை அத்திப்பழத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நன்றாக களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்ட உடைத்துக்கொள்ளும்.
- கொதிக்கின்ற எண்ணெய் உடலில் கொட்டிவிட்டால் வெந்தயத்தை அரைத்து பூச எரிச்சல் தணிந்து ஆறும்.