மூல நோய் குணமாக இயற்கை வழிமுறைகள்
ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் லாரி, பஸ் டிரைவர்கள், நீண்ட நேரம் யோகா நிலையில் இருப்பவர்கள், மிகுந்த உணர்ச்சி வசப்படுபவர்கள், பட்டினி கிடத்தல், மலத்தை அடக்குதல், பரம்பரையாலும் மூல நோய் ஏற்படுகிறது.
இது 21 வைக்கப்படும். இதில் உள் மூலம் வெளி மூலம் என இருவகைகள் தான் அதிகமாக உள்ளது. ஆசன வாய்க்கு அருகே மியூகஸ் மெம்பரேனுடன் உள்ள பகுதியில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வெளியேறும் இது இரத்த மூல என்று சொல்லப்படுகிறது.
ஆசன வாய்க்கு கீழே குருத்தாக வளர்ந்து வரும் இது வெளிமூலம் என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு குடலின் அடிப்பாகம் அபானத்தின் வழியாக வெளியே தள்ளப்படும். மூலப் பகுதி ஆசனவாய்க்கு வெளியே வந்து விட்டால் அதை கிரையோ சர்சரி என்ற ஆபரேஷன் செய்யப்படும். மைனஸ் 18 டிகிரி சென்டிகிரேட் குளிரில் சுருங்கச் செய்து அகற்றுகின்றனர்.
மருத்துவம்
250 கிராம் கருணைக் கிழங்கை சாறு எடுத்து 1/2 லிட்டர் பசும்பால் விட்டு சுண்டைக் காய்ச்சி வைத்துக் கொண்டு பனை வெல்லம் சிறிது சேர்த்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வர இருவகை மூலமும் குணமாகும்.
உலர்ந்த குப்பைமேனி இலை 100 கிராம் அரிசி திப்பிலி 100 கிராம் இரண்டையும் நன்றாக இடித்து தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு தினசரி இருவேளை நெய்யில் சாப்பிட்டு வர குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், மிளகு இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிட மூலம் தீரும்.
முடக்கத்தான் வேர் 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி ஆக்கி 100 மி.லி அளவாக காலை, மாலை 21 நாட்கள் சாப்பிட ஆசனவாய்க் கடுப்பு, மூலம் தீரும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் போட்டு வதக்கி சாப்பிட்டு வர ஆசனக்கடுப்பு, மூல நோய் தீரும்.
பச்சை காய்கறிகள் கீரைவகைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரவில் பால் சாப்பிடுவது நல்லது. தயிர் – மோர் – நெய் சாப்பிடுவது அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. புகைப்பிடிப்பது மது அருந்துவது முதலியவற்றையும் கரம்-புளியையும் நீக்குவது நல்லது.