மூட்டு நோய்க்கு நிரந்தர தீர்வு
மூட்டு நோயால் பத்துக்கு ஒன்பது பேர் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள்தான் அதிகம் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு அபூர்வமாகத்தான் இந்நோய் வரும். பரம்பரையாகவும் இந்நோய் வருகிறது. அதிக எடையுள்ள ஆண்கள் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்படுகின்றன மூட்டு இணைப்புகளில் ரத்தத்தில் அதிக அளவு ‘யூரிக் ஆசிட் ‘ என்னும் படிகம் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெருவிரலில் தான் அதிகம் ஏற்படும். எனினும் தோள் மூட்டு, கை பெருவிரல் மற்ற விரல்கள் மூட்டு இணைப்புகளிலும் ஏற்படும். மாமிசம், மீன் போன்ற உணவுகளையும் வாயு சம்மந்தமான காய்கறிகளையும் தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் யூரிக் ஆசிட்டை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவம்
கருங்கல் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சுட்டு பொடி செய்து சம அளவு பூண்டு சேர்த்து அரைத்து (பசை போல பக்குவத்தில்) மூட்டுகளில் தடவி வர குணமாகும்.
எருக்கன் வேர் சிறிதளவு மூக்கிரட்டை வேர் சிறிதளவு பூண்டு ஒரு பல் சேர்த்து நல்லெண்ணையில் கொதிக்க வைத்து நன்றாக வெந்தபிறகு இறக்கி ஆற வைத்து பாட்டிலில் மூட்டி வைத்துக் கொண்டு மூட்டுகளில் தடவி வாதநாராயணன் இலைகளை இளம் சூடாக வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் கொடுத்து வந்தாலும் மூட்டு வலி தீரும்.