முள்ளங்கி மருத்துவ பயன்கள்
சமைத்து உண்ணக்கூடிய கிழங்கு வகையினம். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும்.வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி என்ற வகைகளாகக் கிடைக்கின்றன. வெள்ளை முள்ளங்கியின் பயன்களே இங்குக் குறிப்பிடப் படுகின்றன.
கிழங்கு, இலை, விதை ஆகியவை மருத்துவப்பயனுடையது. கிழங்குகளை இரவில் உண்பது உடல் நலத்துக்கு உகந்ததன்று.
குணம்
கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும், இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.
மருத்துவ பயன்கள்
முள்ளங்கி சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை குணமாகும்.
முள்ளங்கிச் சாறு 30 மி லி காலை,மாலை கொடுக்கச் சிறுநீரக கோளாறு, நீர்த்தாரை ஆகியவை நீங்கும்.
முள்ளங்கி இலை சாற்றை 5 மி.லி அளவு 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீர்கட்டு, சூதகக்கட்டு, மலக்கட்டு, வாத நோய்கள் தீரும்.
முள்ளங்கி விரைவில் ஜீரணிக்க கூடிய சக்தியை அளிக்கிறது.