மூலிகைகள்
ஆரோக்கியம் காக்கும்… சூரியகாந்தி
சூரியகாந்தி விதைகளில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனாலேயே சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியாக இருந்துவருகிறது. இதன் பருப்பை முந்திரிப்பருப்பு போல் மென்று சாப்பிடலாம். சூரியகாந்தி செடி அசுத்த காற்றை சுத்தமாக்கும்.
வீரியங் கொண்டே விளங்குரவி முன்னோக்கும்
சூரிய காந்திக்குச் சொல்லக்கேள் – பாரிய
வாத முடற்கடுப்பு வன்சூலை நீரேற்றஞ்
சாதகமாய் விட்டொழியுந் தான்
குணம்
சூரியகாந்தியால் வாதம், உடல் வலி, கணுச்சூலை, நீரேற்றம், முதலியவை நீங்கும்.
பயன்கள்
- சூரியகாந்தி வீட்டின் தோட்டங்களில் வைத்து வளர்ப்பதனால் அசுத்த காற்றை சுத்தமாக்கும். இதனால் ஆரோக்கியத்திற்கு பெரும் லாபமுண்டு.
- சூரியகாந்தி விதையில் எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் பிண்ணாக்கு ஆடு, மாடு, கோழிகளுக்கு ஆகாரமாக கொடுக்கலாம்.
- சூரியகாந்திப்பூவின் எடைக்கு 4 மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி வடிகட்டி உடலுக்கு தேய்த்து குளித்துவர சிரசில் ஏறிய துர்நீரை நீக்கி சலதோசம், தலைவலி முதலியவற்றை நீக்கும்.
- மேற்சொன்னபடி செய்த தைலத்தை உடல் பிடிப்பு, வலி, குடைச்சல் முதலியவற்றுக்கு மேல் தேய்த்து வெந்நீரில் லேசாக தேய்த்து விட குணமாகும்.
- சூரியகாந்தி விதையை பருப்பு போல் மென்று சாப்பிடலாம் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.