அழகு

கரும்புள்ளிகள் மறைய

முகப்பரு வந்தவுடன் அதை ஆரம்பத்திலே கிள்ளி எறியவேண்டும் என்ற எண்ணத்துடன் பருவை கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றது. அவற்றை நீக்க சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றி நீக்கலாம்.

  • எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.
  • அரிசிமாவை தண்ணீர் விட்டு கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
  • இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
  • சாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
  • உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
  • மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
    பாதாம் பருப்பு பொடி 1/2 ஸ்பூன், கடலைமாவு 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seventeen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!